உலக கோப்பை லீக் ஆட்டத்தில், தம்மை விட பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை 'கத்துக்குட்டி' என கிரிக்கெட் ரசிகர்களால் வருணிக்கப்படும் அயர்லாந்து அணி அபாரமாக வீழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக, கடினமான வெற்றி இலக்கை அயர்லாந்து விரட்டிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி, பெங்களூரு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைந்தது.
பெங்களூருவில் நடந்து முடிந்த இப்போட்டியில், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து அணி, 49.1 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
துவக்க ஆட்டக்காரர் போர்டர்ஃபீல்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, ஸ்டிர்லிங்கும் ஜாய்ஸ்சும் தலா 32 ரன்கள் எடுத்தனர். நியால் ஓ பிரியென் 29 ரன்கள் எடுத்தார். வில்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கெவின் ஓ பிரியென் வாணவேடிக்கை...
அதைத் தொடர்ந்து களமிறங்கிய கெவின் ஓ பிரியென், இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவரது அசத்தல் பவுண்டரிகளைக் கண்டு வியந்து பெங்களூரு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர், வெறும் 63 பந்துகளில் 113 ரன்களைக் குவித்தார்.
அவருக்கு பக்க பலமாக எதிர்முனையில் ஆடிய குசாக் 47 ரன்கள் சேர்த்தார். இருவருமே துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகினர்.
முன்னதாக, இங்கிலாந்து தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ட்ரோட் 92 ரன்களையும், பெல் 81 ரன்களையும் எடுத்தனர். பீட்டர்சன் 59 ரன்களையும், ஸ்ட்ராஸ் 34 ரன்களையும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில், கெவின் ஓ பிரியென் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தம் இதுவரை 3 லீக் போட்டிகளில், இங்கிலாந்து ஒரு போட்டியில் வெற்றியும், ஒன்றில் 'டை'யும், மற்றொன்றில் தோல்வியும் கண்டுள்ளது.
இந்தியாவுடனான போட்டியிலும் டை ஆகாமல் தோல்வி அடைந்திருந்தால், இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறுவது பெரும்பாடாகியிருக்கும்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மூனி ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார். ஜான்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 7 ரன்கள் சேர்த்தார்.

No comments:
Post a Comment