இனி கவர்ச்சியாக உடையணிய மாட்டேன்; சேலை மட்டும்தான் கட்டுவேன் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார். ஆண்களுடனும் வாழ முடியாது; ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது என்று தடாடலடி கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் நடிகை சோனா. கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து கவர்ச்சி நாயகியாக வலம் வந்து, தயாரிப்பாளராக முன்னேறி கையை சுட்டுக் கொண்ட சோனா, பொது நிகழ்ச்சிகளில் படுகவர்ச்சியான உடைகளையே அணிந்து வந்து பங்கேற்பார். அம்மணியின் கவர்ச்சியை கண்டித்து பெண்கள் நல அமைப்புகள் சில சில மாதங்களுக்கு முன் போர்க்கொடி தூக்கின.
இந்நிலையில் இனிமேல் கவர்ச்சியாக உடை அணிவதில்லை என்று அதிரடியாக முடிவு எடுத்திருக்கிறாராம் சோனா. அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கவர்ச்சியான உடை அணிய மாட்டேன்; கவர்ச்சியான வேடங்களை செய்யவும் மாட்டேன். சேலை கட்டித்தான் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பேன், என்று கூறியிருக்கிறார்

No comments:
Post a Comment