உன்னையே காதலிப்பேன், நெல்லு, கோட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பாக்யாஞ்சலி. வில்லன் நடிகர் வேலுவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் போலீஸ், கோர்ட் என்று பரபரப்பை ஏற்படுத்தி கோலிவுட்டில் பிரபலமானார்.
இந்நிலையில் பாக்யாஞ்சலி, அனீஷ் உபாஸனா என்ற புகைப்படக் கலைஞரை திருமணம் செய்ய இருக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் 24ம் தேதி கேரளாவில் உள்ள கோயில் ஒன்றில் திருமணமும், கொச்சியில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று பாக்யாஞ்சலியிடம் கேட்டால், அதை எனது கணவர் அனீஷ் உபாஸனா தான் தீர்மாணிக்க வேண்டும் என்றும், அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன் என்கிறார்.

oru valiyaa piarachchanai oointhathu.... iniyaavathu kudumpaththai olungka irunthaal sari.
ReplyDelete