கடைசியாக நந்தலாலா படத்தில் இசைஞானியின் இசை பேசப்பட்டது. இப்போது படம் வெளியாகும் முன்பே அழகர்சாமியின் குதிரை படத்துக்கு ஹங்கேரி இசைக் கலைஞர்களை வைத்து இசையமைத்திருப்பது பேசப்பட்டுவருகிறது. நேற்று சென்னையில் நடந்த அழகர்சாமியின் குதிரை இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் இளையராஜா. சசிகுமார், டி.இமான் என்று பார்த்துப் பார்த்து விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.
மைனா புகழ் இமானைப் பேச அழைத்தபோது “ இளையராஜா சாரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீண்டநாள் ஆசை. அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தால் எங்கே நம்மை திட்டிவிடுவாரோ என்று பயந்துகொண்டு பொறுமையாக இருந்தேன். இப்போதுதான் சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.“ என்று சொல்லிவிட்டு இளையராஜாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். சசிகுமாரைப் பேச அழைத்தபோது “இளையராஜா எளிமையான மனிதர். அவரை வாழும் காலத்திலேயே நாம் கொண்டாட வேண்டும். அவரை விட்டு விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரை எப்போது வேண்டுமானாலும் நாம் சந்திக்கலாம். யாரும் அணுக முடியாத மனிதர் அல்ல. அவரை நாம் தனிமைப்படுத்தக் கூடாது” என்று சொன்னதும் அரங்கத்தில் ஏக க்ளாப்ஸ்!
ராஜா ராஜா தான்.இப்போதும் அவர் இசையமைப்பில் திரைப்படங்கள் உருவாகிக் கொண்டு தான் இருக்கிறது.
ReplyDeleteவிரைவில் வரவிருக்கும் படங்கள்
1.மயிலு-இயக்கம் - ஜீவன்
2.செங்காத்து பூமியிலே -இயக்கம்-ரத்னகுமார்
3.படித்துறை-இயக்கம்-சுகா
அவரை தனிமை படுத்த வேண்டுமென நினைத்தவர்கள் இன்று தனியாக உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.