தனஞ்செயன் எழுதிய 'பெஸ் ஆஃப் தமிழ் சினிமா 1931 முதல் 2010 வரை' என்ற புத்தகத்தை சென்னையில் கமல் வெளியிட்டார்.
யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தென்னகத் தலைவராகப் பணிபுரியும் கோ.தனஞ்செயன் எழுதிய புத்தகம் "பெஸ்ட் ஆஃப் தமிழ் சினிமா 1931 முதல் 2010 வரை". இது, இரண்டு பாகங்களாக வெளிவந்து உள்ளது.
சென்னையில் இப்புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய நடிகர் கமல்ஹாசன், "தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒவ்வொரு வீடியோவை இங்கு ஒளிபரப்பினார்கள். ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றாம் பத்து வருட வீடியோவில் இருந்து வந்த எல்லா வீடியோவிலும் நான் இருக்கிறேன். இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதனை அடுத்து வரும் பத்து வருட வீடியோவிலும் இருப்பேன்.
இங்கு தங்கர்பச்சான் பேசும் பொழுது 'தமிழ் சினிமாவில் 98 சதவீதம் பேர் குப்பை போடுகிறார்கள், 2 சதவீதம் பேர் தான் குப்பை பொறுக்கிறார்கள்' என்று குறிப்பிட்டார். ஒரு தடவை இயக்குனர் பாலு மகேந்திரா என்னிடம் பேசும் போது 'ஏன் நல்ல படங்கள் நடித்து கொண்டிருக்கும் பொழுது, குப்பை படங்களிலும் நடிக்கிறாய்' என்று கேட்டார்.
எல்லாம் படங்களிலும் நடித்து நம்மை மெருக்கேற்றி கொள்ள வேண்டும். ஒரு விவசாயி பொறுத்தவரை நரகலும் உரமாகத் தான் தெரியும். அது போல் தான் சினிமாவும்.
இப்புத்தகம் இரண்டு பாகங்களாக வெளிவந்து இருக்கிறது. வரும் வருடங்களில் மூன்றாம் பாகம் எழுதும் போதும் அதில் எனது படங்கள் கண்டிப்பாக இருக்கும்," என்றார் கமல்ஹாசன்.
இப்புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் மிஷ்கின், சேரன், பாலு மகேந்திரா, மகேந்திரன், பார்த்திபன், பாக்யராஜ், செல்வராகவன் மற்றும் பிலிம் நியூஸ் அனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு பத்து வருடங்களைப் பற்றிய வீடியோவை ஒளிபரப்பி, அவ்வருடங்களில் வெளிவந்த படங்களைப் பற்றி இரண்டு இயக்குனர்கள் பேசினர்.
இவற்றில் 1950களுக்குப் பிந்தைய படங்களில் சிறந்தவை என காட்டப்பட்டவை பெரும்பாலும் சிவாஜி மற்றும் கமல் படங்களாகவே இருந்தன.
"1950 மற்றும் 60 களில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான புதிய முயற்சிகள் அமரர் எம்ஜிஆரின் படங்களிலிருந்தே துவங்கியிருந்தன. ஆனால்1960 முதல் 69 வரையிலான காலகட்டத்தில் சிறந்த படங்கள் என தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளவற்றில், எம்ஜிஆரின் சிறந்த படங்களாக 5 மட்டுமே இடம்பெற்றுள்ளது புத்தகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக்கியுள்ளது", என்றார் விழாவுக்கு வந்திருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
ஆனால் சிவாஜி நடித்தவற்றில் இரும்புத்திரை போன்ற தோல்விப் படங்களும் கூட இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லையை விரிவுபடுத்திய ரஜினியின் படங்களான பில்லா, சிறந்த கதை-நடிப்பு என பாராட்டப்பட்ட ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், பொல்லாதவன், அண்ணாமலை போன்ற படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

No comments:
Post a Comment