சட்டப்படி குற்றம்' படத்திற்கு தடை கோரி சலீம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். இது ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சிக்கு எதிரான படம் இது என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் சத்யராஜ் என்ன நினைக்கிறார் என்பதை பார்ப்போம் . ஏனென்றால் அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்திருப்பவர் அவர்தானே?
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் போதுதான் கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடித்தேன். அதில் அப்போதிருந்த புரட்சித்தலைவர் அரசுக்கு எதிரான பல விஷயங்களை சுருக்கென்று எழுதியிருந்தார் கலைஞர். அதை பார்த்துவிட்டு என்னை எதுவும் கேட்கவில்லை எம்ஜிஆர். நான் நடித்த அமைதிப்படை அரசியல்வாதிகளை நார் நாறாக கிழிக்கிற படம்தான். அந்த படம் வெளியான நேரத்தில் ஜெயலலிதா மேடம்தான் சிஎம் ஆக இருந்தாங்க. அப்பவும் என் மேல் அவங்க கோபப்படல.
இப்போது இந்த படத்திலும் நான் அனல் தெறிக்கும் வசனங்களை பேசியிருக்கேன். என்னை பொறுத்தவரை நான் ஒரு நடிகன். அவ்வளவுதான். என் மீது எந்த விமர்சனமும் வராது என்று நம்புகிறேன் என்றார்.
வைக்கோ அதிமுக கூட்டணியை விட்டு விலகியதால் திமுக வெற்றி பெறுமோ என்ற பயம் சத்யராஜ்க்கும் வந்திடுசுங்கோ.....!!
No comments:
Post a Comment