புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது நரிகள் ஆட்டம் போடுமே... இந்த பாடலுக்கு மயங்காத தமிழர்களே இருக்க முடியாது! தம்பி அர்ஜுனா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் உருவாக காரணமாக இருந்தவர் பெரோஸ்கான். இவரே தயாரித்து, இயக்கி நடிக்கும் அடுத்த படம்தான் பாசக்கார நண்பர்கள். இப்படத்தில் பெரோஸ்கானின் மகன் அஜ்மல்கான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நம்புங்க இந்த பையனுக்கு வயசு பதினைந்தேதான்! இதைவிட ஆச்சர்யம் ஐந்து வருஷமாக ஹ§சைனியிடம் கராத்தேவும், ஆக்ஷன் பிரகாஷிடம் ஸ்டண்ட்டும் கற்று வருகிறாராம்.
அப்பா முன்னாடி எப்படி கிஸ் பண்ணுறது தெரியல. தைரியத்தை வரவழைச்சுட்டுதான் நடிச்சேன் என்று முகத்தில் வெட்கம் வழிய பேசுகிற எந்த சங்கடத்தையும் தன் மகனுக்கு தரவில்லை பெரோஸ்கான். ஏனென்றால் இந்த படத்தில் காதலே இல்லையாம். ஆனால் திவ்யா என்றொரு மான்குட்டியை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரது கேரக்டர் காதலுக்காக அல்ல, நட்புக்காகவாம்.
பள்ளியில் படிக்கும் அஜ்மல்கான் குத்து சண்டையில் உலக புகழ்பெற்ற வீரராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேற முடியாத அளவுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார். அதற்கு நண்பர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றார் பெரோஸ்கான். நிஜத்தில் கிக் பாக்சிங் பயிற்சியாளர்கள் இருவர்தான் அஜ்மல்கானின் வில்லன்கள்.
ஒரிஜனலையே நடிக்க வைத்ததன் காரணம், ஃபைட்டில் எங்குமே செயற்கை தனம் வெளிப்பட கூடாது என்பதற்காகதான். நான் நினைத்த மாதிரி வந்திருக்கிறது எல்லா ஃபைட்டும் என்றார் பெரோஸ்கான்.
இசை தினாவாம். முதன்முறையாக குத்துப்பாட்டு இல்லாத தினாவை பார்க்கலாம்!
No comments:
Post a Comment