சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் ஆனது இதே மாதிரி ஒரு பவுர்ணமி நாளில்தான். பங்குனி உத்திரம் என்று சொல்லப்படுகிற இந்துக்களின் விசேஷ தினமான இன்று நடெங்கிலும் முழு பவுர்ணமி. இதே நாளில்தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
உன் பெயரை நான் மாற்ற போறேன். சந்திர காந்த், ரஜினி காந்த், ஸ்ரீகாந்த் இந்த மூணு பேர்ல உனக்கு எது பிடிச்சிருக்கோ சொல்லு. அதையே வச்சிரலாம் என்று பாலசந்தர் கேட்டபோது பேய் முழி முழித்தாராம் சிவாஜிராவ். சரி... நானே சொல்லிடுறேன். ரஜினிகாந்த் என்றார் இயக்குனர் சிகரம் பாலசந்தர்! அது நடந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு ஹோலி தினத்தன்றும் பாலசந்தரை சந்தித்து ஆசி பெறுவாராம் ரஜினி. நேரில் வர முடியாத ஹோலிகளில் போன் மூலமாவது ஆசிர்வாதம் பெறுவாராம் குருநாதரிடம்.
இப்பல்லாம் நேர்லயும் வர்றதில்ல. போனிலேயேயும் பேசுறதில்ல. ஏன்ப்பா என்றார் பாலசந்தர். இந்த கேள்வியை அவர் கேட்டது இயக்குனர்கள் சங்கம் நடத்திய விழாவில். ஸாரி சார். இந்த வருஷம் கண்டிப்பா வர்றேன் என்றார் ரஜினி. இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அத்தனை பேரும் இன்று பாலசந்தர் வீட்டுக்கு ரஜினி செல்வார் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்று இரவு வரை டைம் இருக்கிறது. பார்க்கிறாரா, பார்க்கலாம்...
No comments:
Post a Comment