அவன் இவன் படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்து விட்ட பாலா. படத்தின் போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக இருந்துவருகிறார். என் அடுத்தப் படத்தில் புதுமுக ஹீரோதான் நடிப்பார் என முன்பே தெரிவித்திருந்தார் பாலா. அதன் படி பாலா அடுத்து இயக்கும் அகங்காரன் படத்தின் நாயகனை கண்டுபிடித்து விட்டாராம். அதே சமயத்தில் அவர் மனதில் நரேனும் இருக்கிறார் என்றும் சொல்றார்கள்.
ஆனால் படத்தின் நாயகி ஒரு பிரபல நடிகையாகத் தான் இருப்பாராம். அதிகாரப் பூர்வமான தகவலை விரைவில் சொல்ல இருக்கிறாராம் பாலா. ஏப்ரல் ஏழாம் தேதி விஷால் ஆர்யா இணைந்து நடித்த அவன் இவன் திரைக்கு வருவதாக திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு தான் தான் அடுத்தப் பட வேளைகளில் கவனம் செலுத்த இருக்கிறார் பாலா.
பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யாவின் பெயர் கும்பிடுகிறேன் சாமியாம். விஷாலுக்கும் ஒரு வித்யாசமான பெயர் இருக்கிறது, அது வால்டர் வணங்காமுடி. அண்ணனும் தம்பியுமாக வரும் ஆர்யாவும் விஷாலும் இன்னும் என்னென்ன ரகளை வைத்திருக்கிறார்களோ!

No comments:
Post a Comment