முதல்வர் மு.கருணாநிதியின் வம்சமான அருள்நிதி 'வம்சம்' படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் களமிறங்கி களக்கியவர். சென்னையில் வளர்ந்திருந்தாலும் முதல் படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற அருள்நிதி இரண்டாவதாக 'உதயன்' படத்தில் நடிக்க துவங்கினார்.
அருள்நிதி தனது இரண்டாவது படத்தில் நகரத்தில் வாழும் இளைஞனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை சாப்ளின் இயக்குகிறார். இவர் தரணி, கரு.பழனியப்பன், பாண்டிராஜ் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். விறுவிறுப்பாக நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டிவிட்டது.
இப்படத்தின் பாடல்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்த படக்குழுவினர், பாடல்காட்சிகளையும் முடித்துவிட்டு திரும்பிவிட்டனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்குப் பிறகு தனது மூன்றாவது படத்தையும் முடிவு செய்துவிட்டார் அருள்நிதி. 'மெளன குரு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சாந்தகுமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் தரணியுடன் கில்லி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
கமர்ஷியல் ஃபார்மூலாவில் உருவாகும் 'மெளன குரு' படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஹீரோயின் மற்ற நடிகர்-நடிகைகளின் தேர்வு நடைபெற்றுகொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 18ஆம் தேதியன்று துவங்க இருக்கிறது.

No comments:
Post a Comment