இப்போது நடக்கும் அரசாங்கமே சட்டப்படி குற்றம் படத்தை பார்த்தால் ஐயையோ... என்று பதறுவார்கள் அந்த அளவுக்கு இந்த படம் ஒரு அரசியல் படமாக உருவாகியிருக்கிறது என்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் குஞ்சுமோன் பேசினார். அவரைத் தொடர்ந்து வந்த பலரும் இப்படத்தின் காட்டத்தை காட்டமாகவே வெளிப்படுத்தினார்கள்.
அப்படிப்பட்ட படமா? என்று நாம் யோசித்துகொண்டிருக்கும்போதே, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இவரின் நேரடி படங்கள் தற்போது எதுவும் வெளியாகவில்லையென்றாலும், சட்டப்படி குற்றம் வெளியாகும் மார்ச் 25ஆம் தேதியன்று வெளியாகும் 'குள்ளநரி கூட்டம்' படத்திற்கு தனது முழு ஆதரவை கொடுக்கப்போகிறார்.
விஷ்னு, ரம்யா நம்பிசன் நடித்திருக்கும் இப்படத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீபாலாஜி இயக்கியிருக்கிறார். இப்படத்தை பார்த்த உதயநிதி படம் நன்றாக வந்திருக்கிறது நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், படத்தின் சிறப்புக்களை கூற மார்ச் 15 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார்.
செல்வகணேஷ் இசையமத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு விழா மார்ச் ௧௬ அன்று எளிமையான முறையில் நடைப்பெற்றது. ஆடியோ சிடியின் முதல் பிரதியை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
No comments:
Post a Comment