தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்!
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'பகவலன்'. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே பகலவன் படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
கிடார் வாசிக்க ஸ்டீவ் வாட்ஸியிடம் கற்ற சூர்யா
முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ஏழாம் அறிவு படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார். இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா. அதுமட்டுமின்றி கிடார் வாசிக்கும் ஸ்டைலை கிடார் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸியிடம் கற்றாராம் சூர்யா.
கமல் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும்
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு காணாமல் போன ரீமா சென், கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் ஆசை என தெரிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறிய ரீமா சென், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக கமல் சார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை. விரைவில் அது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் எனக் கூறினார்.



No comments:
Post a Comment