விக்ரம் நடிப்பில் செல்வராகவன் தொடங்கிய படம் சிந்துபாத். ரமேஷ்பாபு படத்தின் தயாரிப்பாளர். லடாக்கில் விக்ரம் மற்றும் ஸ்வாதியை வைத்து சில காட்சிகள் படமாக்கவும் செய்தார் செல்வராகவன். சில காரணங்களால் சிந்துபாத் கைவிடப்பட்டது. அதன் பிறகு விக்ரம் கே.குமார், பூபதி பாண்டியன் என பல மலர்கள் தாவி இறுதியாக விஜய் இயக்கத்தில் தெய்வமகன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். விக்ரமின் கால்ஷீட் கைவசம் இருப்பதால் சிந்துபாத் தயாரிப்பாளர் விக்ரமுக்கான படத்தை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்க முடிவு செய்துள்ளார். சுசீந்திரன் தற்போது கௌதம் தயாரிப்பில் அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார். இதற்கு பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து விக்ரமுக்கு ஜோடியாக தீக்ஷா சேத் ஹீரோயினாக நடிக்கிறார்.

No comments:
Post a Comment