‘பூ’ பார்வதி நடித்த ‘சிட்டி ஆஃப் காட்’ மலையாளப் படம் வரும் 9ம் தேதி வெளிவருகிறது. இதில் அவர் தமிழ்ப் பெண்ணாக நடித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: ‘பூ’ படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும் ‘சிட்டி ஆஃப் காட்’ படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து கேரளா வந்து கட்டிட வேலை செய்யும் ஏழைப் பெண்ணாக நடிக்கிறேன். என் கேரியரில் முக்கியமான கேரக்டராக இது இருக்கும். பொள்ளாச்சி பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் பழகி அவர்களின் மேனரிசம், குணநலன்கள், பேச்சு வழக்கு இவற்றை கற்றுக் கொண்ட பிறகுதான் அந்த கேரக்டரில் நடித்தேன். உண்மையில் தமிழ்ப் பெண்களை நான் நேசிக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிப்பது என்ற எனது பாலிசியை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் பல வாய்ப்புகள் நழுவிப் போயிருக்கிறது. தற்போது எம்.ஏ இறுதியாண்டு படிக்கிறேன். தேர்வு எழுதி முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பேன்.

No comments:
Post a Comment