நடுத்தர குடும்பத்து நயன்தாரா போலிருக்கிறார் பானு. தாமிரபரணி படத்தில் அறிமுகமானவர். ஓஹோவென்று வரவேண்டிய பானு, ஓ.கே என்கிற அளவுக்கு கூட முன்னேறவில்லை. அதற்கு காரணம் என்ன? அவரையே கேட்டோம். எல்லாம் குடும்ப பிரச்சனைதாங்க என்றார் சோகத்தை அடக்கிக் கொண்டு.
அந்த படத்தில் நான் நடிக்கும் போது 9 ம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன். என்னை கைட் பண்ண ஆளே இல்லை. அந்த நேரத்திலதான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் விரட்டியடிச்சார். அப்படியே தப்பி தவறி அவரு கேட்ட சம்பளத்தை கொடுக்க முன் வந்த படங்கள் எல்லாம் என்னை உரிச்சு காட்டுறதிலேயே குறியா இருந்துச்சு. சும்மா பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு ஒதுங்கிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார் நடிகர் ஆர்.கே. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்துட்டேன்.
இனிமே தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பேன். ஏன்னா என்னோட அப்பா இப்போது எங்களோட இல்லை. அவரை வீட்டை விட்டே அனுப்பிட்டோம் என்றார் பானு. அப்படியே தனது உடம்பிலிருந்த எக்ஸ்ட்ரா வெயிட்டையும் குறைத்துவிட்டார். இப்போது அவர் ஃபிப்டி கே.ஜி தாஜ்மஹால்!
'சட்டப்படி குற்றம்' படத்தில் சாமியாரால் ஏமாற்றப்பட்ட கேரக்டராக நடிக்கிறாராம். நயன்தாரா இடத்தை பிடிப்பாருன்னு நினைச்சா, இப்படி ரஞ்சிதா இடத்தை பிடிச்சிட்டாரே!
No comments:
Post a Comment