திமுக துவங்கிய பின், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கலைஞர், இதுவரை 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஐந்து முறை தமிழகத்தையே ஆண்டாலும், சொந்த தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை.
அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்த கலைஞர், 24.03.2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவாரூரில் தேர்தல் அதிகாரி ஜெயராஜிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
1957ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்ட கலைஞர், 8,296 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1962ஆம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்ட கலைஞர், 1,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1967ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கலைஞர், 20,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1971ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கலைஞர், 12,511 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1977ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட கலைஞர், 16,438 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1980ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட கலைஞர், 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1989ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்ட கலைஞர், 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1991ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்ட கலைஞர், 890 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1996ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், 35,784 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2006ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், 8,526 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கலைஞர் போட்டியிடவில்லை.
இன்றைய பதிவுகள்...
- உட்கார சீட்டு இல்லை; நின்னுக்கிட்டு பிரச்சாரமா? ...
- தேர்தல் களத்தில் ஜெயலலிதா கடந்து வந்த பாதை...
- அழகிரி மிரட்டல் என்னிடம் செல்லாது -விஜயகாந்த்
- முதல்வர் கருணாநிதி சொத்து விவரம்
- திருச்சி கல்வீச்சு : ஜெயலலிதா பதில்
- சாதிக்பாட்சா தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன?
- விஜய் படத்திற்காக மீண்டும் இணையும் இரு சிகரங்கள்
- தமிழகத்தில் கடைசி ஏழை இருக்கும் வரை இலவச திட்டங்கள...
- கருணாநிதி - ஜெயலலிதாவின் சொத்துக்கள் 5 ஆண்டுகளில் ...
- அதிமுகவுடன் கூட்டணி ஏன் ?-விஜயகாந்த்
- ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்
No comments:
Post a Comment