தனக்காக வாக்களித்த வாக்காளர்களைச் சந்தித்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கருப்பசாமி, வாக்காளர்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்து அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார்.
அமைச்சராக பதவியேற்றபோதே படு துடிப்பாக உறுதிமொழியை வாசித்து முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைவரையும் கவர்ந்தவர் கருப்பசாமி. படு வேகமாக அவர் பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்து கலகலப்பூட்டினார்.
இந்த நிலையில், நன்றி சொல்லவே வார்த்தை இல்லையே என்ற பாடல் வரிக்கேற்ப சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் தனக்கு 4வது முறையாக வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களை பிற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து நன்றி சொல்லி தொகுதியை கலக்கி வருகிறார் கருப்பசாமி.
இவர் காலில் விழுவது இது முதல் முறையல்ல. தேர்தல் பிரசாரத்தின்போதே விழுந்து விழுந்துதான் வாக்கு சேகரித்தார். வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து காலில் விழுந்து வாக்கு கேட்டபோது எதிர்கட்சியினர் காலில் விழுந்து வாக்கு கேட்கும் இவர் ஜெயித்த பின், காலை வாரி வி்ட்டு விடுவார் என்று இவரை பார்த்து ஏளனம் செய்தனர். இருந்தாலும் சளைக்காமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார் கருப்பசாமி. இதனால் தொகுதி மக்களும் எதைப் பற்றியும் கவலைபடாமல் கருப்பசாமிக்கு 4வது முறையாக வாய்ப்பு அளித்தனர்.
இந்த வாய்ப்பை வழங்கிய வாக்காளர்களுக்கு அவர் தற்போது தனது நன்றியை காலில் விழுந்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை மட்டு்மி்ன்றி புதிய மாற்றத்தையும் அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment