மேற்கிந்திய தீவுகள் அணியின் மிடில்-ஆடர் பேட்ஸ்மேன் ரனகோ மோர்டன் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். அதேபோல இந்தியாவில் நடந்த சாலை விபத்தில், ரஞ்சி கோப்பையில் விளையாடி வந்த மகாராஷ்டிரா வீரர் கிஷோர் பிக்னே என்பவரும் சாலை விபத்தில் பலியானார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் மிடில்-ஆடர் பேட்ஸ்மேன் ரனகோ மோர்டன். கடந்த 2005ம் ஆண்டு தேசிய அணியில் சேர்க்கப்பட்ட ரனகோ, 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைக்கும்
ரனகோ, நேற்றிரவு டொபாகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார்.
இது குறித்து முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கிரிஸ் கெய்ல், ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு நேர்மையான கிரிக்கெட் வீரரை இழந்துவிட்டோம். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகின்றேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
டிரினிடாட் டொபாகோ அணியை சேர்ந்த வீரர்கள், ட்விட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில்,
செளத் போன்ட்டில் இருந்து வாகனத்தில் சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த தூண் மோதி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ரனகோ பலியாகிவிட்டார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு இது பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறுகையில்,
ரனகோ பிரிந்து சென்றாலும், மறக்க முடியாதவர். நாங்கள் அவரை இழந்து தவி்க்கின்றோம். பிரிவில் தவித்து வரும் ரனகோவின் குடும்பத்தை குறித்து நினைத்து பார்த்தேன். அருமையான நபர், சிறந்த போட்டியாளர், ஆனால் சோகமான செய்தி என்றார்.
நியூஸ்லாந்து வீரர் ஸ்கோட் ஸ்டைரிஸ் வெளியிட்ட செய்தியில், மேற்கிந்திய தீவுகள் வீரர் ரனகோ விபத்தில் இறந்த செய்தியை கேட்டு துயரம் அடைந்தேன். இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்று தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை வீரர் பலி:
அதேபோல ரஞ்சி கோப்பையில் விளையாடி வந்த கிஷோர் பிக்னே என்பவரும் நேற்று இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகாரஷ்டிரா மாநில அணியில் விளையாடி வந்தவர் கிஷோர் பிக்னே (24). நேற்று சக்ரபதி கிராமத்தில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். அதன்பிறகு சகவீரரான அபிலாஷ் என்பவருடன் மோட்டர் சைக்கிளில் லட்டூர் - பார்ஷி சாலை வழியாக சென்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி, கிஷோரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிஷோர் பலியானார். சகவீரர் அபிலாஷ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
aalntha anuthaabangaal ....
ReplyDelete