அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்கப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய 3 மனைவிகளும், குழந்தைகளும் பிடிபட்டனர். இவர்களில் மூத்த மனைவியான கைரிஷா சபீர் என்பவர் தான் பின்லேடன் பதுங்கி இருப்பது குறித்து அமெரிக்காவிடம் காட்டி கொடுத்தார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பின்லேடன் தனது இளைய மனைவி அமல் அகமத் அலி சாதாஹ் என்பவருடன் நெருக்கமாக இருந்ததே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த 3 மனைவிகளும் சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்லேடனை காட்டிக் கொடுத்த விவகாரத்தில் மூத்த மனைவியின் மீது இளைய மனைவி ஆத்திரம் அடைந்து சிறைக்குள்ளேயே தகராறில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசியதுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டனர். இருவருக்கும் ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment