ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் முகமது ஹசீப், நாசீர் ஜாம்ஷெட் ஆகியோர் அதிரடியாக சதமடித்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து 329 ரன்களை எட்டியது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்காக கிரிக்கெட் தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெறுகிறது.
போட்டியின் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பாகிஸ்தான் துவக்க பேட்ஸ்மேன்களான முகமது ஹசீப், நாசீர் ஜாம்ஷெட் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பாகிஸ்தான் துவக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக சதமடித்தனர். 35வது ஓவர் வரை தொடர்ந்து களத்தில் நின்ற துவக்க வீரர் நாசீர், அஸ்வினின் சுழலில் சிக்கினார். 1 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்த நாசீர் 104 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார்.
அவரை தொடர்ந்து சற்றுநேரத்தில் முகமது ஹசீப் 105 ரன்களை எடுத்த நிலையில், அசோக் டின்தாவின் பந்தில் போல்டானார். அதிரடியாக ஆடி வந்த உமர் அக்மல் 28 ரன்களில் அவுட்டானார்.
இறுதிக்கட்டத்தில் வந்த அனுபவ வீரர்கள் யூனிஸ் கானும், அப்ரிதியும் அணியின் ஸ்கோரை சரமாரியாக உயர்த்தினர். ஆனால் அப்ரிதி சிக்ஸ் அடிக்க முயன்ற போது, கேட்ச்சாகி வெளியேறினார். அதிரடியை தொடர்ந்த யூனிஸ் கான் அரைசதம் கடந்து ரெய்னாவின் அருமையாக கேட்ச்சில் அவுட்டானார். கடைசி ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஹம்மது அசம் 4 ரன்களில் வெளியேறினார்.
போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து 329 ரன்கள் எடுத்தது. இன்று கட்டாயம் வெற்றிப் பெற வேண்டிய இந்தியா, 330 ரன்கள் எடுக்க விரைவில் களமிறங்க உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்காக கிரிக்கெட் தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியில் இந்தியா கட்டாய வெற்றிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இந்திய அணி:
இந்திய அணியில் கம்பிர், விராத் கோஹ்லி, சச்சின், ஆகியோர் பார்மில் உள்ளது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தொடர்ந்து வாய்ப்புகளை வீணாக்கிய ஜடேஜாவுக்கு இன்று வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் இறுதிக்கட்டத்தில் வந்து அதிரடியாக ஆடும் கேப்டன் டோணியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.
பந்துவீச்சில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய இளம்வீரர் அசோக் டின்டாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இர்பான் பதானின் பந்துவீச்சு அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. பிரவீண் குமார் பந்துவீச்சில் தனது அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. சுழல் பந்துவீச்சுக்கு அஸ்வின் உடன் ரெய்னா, ஒத்துழைப்பு வழங்குவார்.
பாகிஸ்தான் அணி:
ஆசியக் கோப்பையில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ள பாகிஸ்தான், இன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்ய முயற்சி செய்யும். பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், உமர் அக்மல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
ஆனால் ஹபீஸ், ஜாம்ஷெட் ஆகியோர் அணிக்கு சிறந்த துவக்க அளித்து வருகின்றனர். அனுபவ வீரர்கள் யூனிஸ் கான், அப்ரிதி ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து கோட்டை விடுவது இந்தியாவுக்கு சாதகம்.
பந்துவீச்சில் உமர் குல், அய்ஜாஸ் சீமா, முகமது ஹபீஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சுழலுக்கு சயீத் அஜ்மல், அப்ரிதி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
கிரிக்கெட் உலகில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment