சேலம் அம்மாப்பேட்டையில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்மாப்பேட்டை மற்றும் இதையொட்டி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சாமியை வணங்கி செல்வார்கள். இந்த கோவிலில் திருப்பணி நடந்து வந்தது. திடீரென இந்த திருப்பணி நடக்கவில்லை. இந்த திருப்பணி நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்கோவிலில் இரவு நேரத்தில் அம்மன் அழும் சத்தமும், உர் உர் என்ற சத்தமும் கேட்கிறது.
இதை கேட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அவர்களும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவும் இந்த சத்தம் கேட்டது. இதை அறிந்த திரளான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து இந்த சத்தத்தை கேட்டனர். பின்னர் அவர்கள் கோவில் முன் கற்பூரம் ஏற்றி சாமியை வணங்கி சென்றனர். கோவிலில் ஏன் இந்த சத்தம் கேட்கிறது என இந்த பகுதியில் வசிக்கும் ராஜன், சாந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கூறியதாவது:-
இந்த கோவிலை தெலுங்கு தேவாங்கர் சமூகத்தினர் பயன்படுத்தி சாமியை வணங்கி வருகிறார்கள். கோவிலில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ராஜகோபுரம் கட்டத்தொடங்கினர். பின்னர் இந்த பணி நின்று விட்டது. நின்று போன கோவில் திருப்பணியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய நிர்வாகிகள் மூலம் திருப்பணி தொடர்ந்து நடந்தது.
கடந்த ஒரு வாரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தான் கோவிலில் அம்மன் அழும் சத்தமும், நீண்ட மூச்சு வாங்குவது போன்ற சத்தமும் கேட்கிறது. சில நேரத்தில் சலங்கை சத்தமும் கேட்கிறது. இந்த சத்தம் கேட்காமல் இருக்க வேண்டும் என்றால் தடைப்பட்டுள்ள திருப்பணி மீண்டும் நடக்க வேண்டும். திருப்பணி தடைப்பட்டதால் தான் அம்மன் ஆவேசப்பட்டு அழுகிறார் என்றும் நாங்கள் நம்புகிறோம். உடனே திருப்பணி தொடங்கி கோவிலில் கும்பாபிசேகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு 10 மணி அளவில் சத்தம் கேட்க தொடங்கியது. இதை அறிந்த திரளான பெண்கள் கோவில் முன் திரண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் இந்த சத்தம் கேட்கவில்லை. இதன் பிறகு ஒரு மணிநேரம் கழித்து சலங்கை சத்தம் கேட்டது. பிறகு சத்தம் கேட்கவில்லை. சத்தம் விட்டு விட்டு கேட்டதால் பொதுமக்களும், பக்தர்களும் கோவில் முன்புறமும், கோவில் பின்புறமும் நின்று சாமியை வணங்கினர்.
திரளான பொதுமக்கள் கோவில் முன் பூ, பழம் வைத்து வணங்கி சென்றனர். நேற்று இரவு கோவிலில் வந்த சத்தத்தை கேட்க பக்தர்கள் விடிய விடிய கோவில் முன் அமர்ந்து இருந்தனர். இதனால் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. கோவிலில் சத்தம் வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரத்தில் மட்டும் இந்த சத்தம் வருவதால் கோவிலுக்குள் பறவை ஏதும் இருக்குமோ என எண்ணிய பக்தர்கள் கோவில் முழுவதும் சுற்றி பார்த்தனர்.
ஆனால் பறவை ஏதும் இல்லை. திருப்பணி செய்ய கோவில் முழுவதும் தென்னை மட்டை கட்டப்பட்டுள்ளது. இதில் ஏதும் பறவை இருக்குலாம் என கருதிய பக்தர்கள் தென்னை மட்டைகளை தட்டி பார்த்தனர். இதிலும் எந்த பறவையும் இல்லை. இரவு நேரத்தில்மட்டும் எப்படி சத்தம் வருகிறது என பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.
ஆரிய ஊடுருவலின் பின் தமிழர்களிடம் இதுவும் வரும் இன்னமும் என்னென்னவோ எல்லாம் வரும். ஆரியத்தின் பிரச்சாரத்திற்காக சிற்றரசன் இராமனையே தெய்வமாக்கியவன் தமிழன். இது என்ன பெரிய விசயமா?
ReplyDelete