இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போரின்போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளும் கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு தலைவர் என்பதால் அந்த அடிப்படையில் அவருக்கு சட்ட விலக்கு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இருப்பினும் திரிகோண மலை கடற்கரையில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் மூதூர் தொண்டு நிறுவன படுகொலை போன்ற சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரிதான்.வெளி நாட்டு அதிபர் என்றால் விதி விலக்காயின்,எந்தப் படுகொலையையும் செய்யலாம்.சேர்பியன் அதிபர் வழக்கு,கடாபி, சதாம்,பின் லேடன் இவை எல்லாவற்றுக்கும் அமெரிக்கா தலையை நுழைத்தது ஏன்?தங்களுக்கு ஒரு நீதி தமிழனுக்கு இன்னொரு நீதியா?
ReplyDelete