சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்றூ மாலை கோவில் சன்னதியில் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது அவர், ’’என்னுடைய கூட்டணியை கேவலமாக பேசினார்கள். அவர்கள் என்னைத்தான் தேடி வந்தார்கள். நான் அவர்களை தேடிப்போகவில்லை. விஜயகாந்த் எப்பவும் மக்களோடுதான் கூட்டணி வைப்பான். சேலத்தில் நடந்த மாநாட்டில் கூட்டணி பற்றி என்னுடையை தொண்டர்களிடம் பேசித்தான் முடிவு செய்தேன்.
நாட்டு மக்கள் ரொம்ப பிரச்சனையில் இருந்தாங்க. அதனாலதான் கூட்டணி வைத்தேன். நான் அசிங்கப்பட்டாலும் என் தொண்டர்களை தலைவணங்க விடமாட்டேன்.ஆனால், நான் இப்போது வரைக்கும் அசிங்கப்படல.
100 நாள் ஆட்சின்னு அதிமுகவை வாழ்த்தச்சொன்னாங்க. ஆனா, தமிழ்நாடு முழுக்க கரண்ட் ஒரு பிரச்சனையாகி மக்கள் சங்கடத்தில் இருக்கும்போது நான் இவங்களை வாழ்த்த முடியுமா?
இப்ப அவுங்கள சுத்துன கும்பல் போயிடுச்சு. அவுங்ககிட்ட இருந்த கூட்டம் போயிடுச்சு. எங்கிட்ட இருக்குற கூட்டம் நிலையா இருக்கும்.
விலைவாசி பத்தி கேட்டா, கோபப்படுறாங்க. உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்குறாங்க. உள்ளது உள்ளபடி காட்டுனா சட்டசபையில நடந்தது என்னன்னு தெரியும். ஆனா காட்டமாட்டேங்குறாங்க.
சபை நாகரிகத்துக்காக நான் கையை கட்டி உட்கார்ந்துட்டேன். ஆனா அப்பா, அம்மாவ பத்தி திட்டினா கோபப்படாம இருப்பாங்களா? அதான் கேட்டேன். இது ஆனவத்துக்கும் அமைதிக்கும் நடக்கும் போர்.
ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிச்சு அஞ்சு வருசத்தை ஓட்டலாம். அது என்னால முடியாது. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. ஒன்னே முககால் கோடி கொள்ளை, 40 கிலோ தங்கம் கொள்ளை இதுதான் தமிழகத்தின் நிலை.
பஞ்சம் ஒழிஞ்சா லஞ்சம் ஒழிஞ்சிடும். கவர்ச்சி திட்டங்கள நம்பாதீங்க; வளர்ச்சி திட்டங்தான நமக்கு வேணும். திமுக ஆட்சியில அதிமுககாரங்க கரைவேட்டி கட்டல. அதிமுக ஆட்சியில திமுககாரங்க கரை வேட்டி கட்டாம இருக்காங்க. என் தொண்டர்கள் எப்போதும் தைரியமானவஙக். எப்போதும் கட்சி கரை வேட்டிதான் கட்டி இருப்பாங்க. நாங்க யாருக்கும் பயந்து ஓடமாட்டோம்.
மின் உற்பத்திக்கு எந்த ஒரு திட்டமும் கிடையாது. அதுக்கு 2000ம் ஆண்டிலேயே திட்டமிடணும். அதை இவுங்க செய்யல.
ஆனா கொள்ளையடிச்சிக்கிட்டிருக்காங்க. மக்களை ஏமாத்துறாங்க. 10 மணி நேரம் மின்வெட்டு கொண்டு வந்து தமிழகத்தையே இருட்டாக்கிட்டாங்க.
என் கல்யாண மண்டபத்த இடிசாங்க. அத கட்டிக்கொடுங்கன்னு கேட்டேனா? ஜனங்களூக்கு நல்லது செய்யுங்கன்னு தானே கேட்டேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.
No comments:
Post a Comment