பிரதமர்
மக்கள் நிதித்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள காப்பீடு திட்டத்தில் , குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே காப்பீடு அளிக்கவும்,
வரி செலுத்துவோருக்கு சலுகை தேவையில்லை எனவும்
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனைவருக்கும்
வங்கி சேவை எளிதில் கிடைக்க
வேண்டும் என்ற நோக்கத்தில், ‘பிரதமர்
மக்கள் நிதி
திட்டம்‘ (பிரதான் மந்திரி ஜன்
தன் யோஜனா) என்ற புதிய
திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 28ம்
தேதி பிரதமர் நரேந்திர மோடி
தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு
ஜனவரி 26ம் தேதிக்குள் ஏழரை
கோடி பேருக்கு புதிதாக வங்கி கணக்கு
தொடங்க வேண்டும் என்ற இலக்கையும் மத்திய
அரசு நிர்ணயித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கான விபத்து
காப்பீடு, 30,000க்கான ஆயுள் காப்பீடு
உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில்,
இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு
தொடங்கிய அனைவருக்கும் இந்த காப்பீடு கிடைக்காது
என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மக்கள் நிதி
திட்டத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ள வரையறைகள் குறித்து நிதியமைச்சகம் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், 18 வயது முதல் 60 வயதுக்கு
உட்பட்டவர்களுக்கு மட்டுமே எல்ஐசி மூலம்
காப்பீடு வழங்கப்பட உள்ளது. அதிலும், குடும்பத்துக்கு
ஒருவர் மட்டுமே இந்த திட்ட
சலுகையால் பயன்பெற முடியும் என்று
வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி, வருமான வரி செலுத்துவோர்,
ஆம் ஆத்மி பீமா யோஜனா
போன்ற அரசின் பிற நலத்திட்டங்களில்
பயன்பெறுவோர் பிரதமர் மக்கள் நிதி
திட்டத்தில் காப்பீடு பெற முடியாது.
இதன்படி,
பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின்
கீழ் கணக்கு துவங்கியுள்ளவர்களில் சுமார் 50 சதவீதத்தினர்
மட்டுமே திட்ட பலனை முழுமையாக
பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று வங்கிகள்
தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து
வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் ஏழைகள்
மட்டுமே பயன்பெறும் வகையில் கவனத்துடன் வரையறைகள்
செய்யப்பட்டுள்ளன. எனவே, வரி செலுத்துவோருக்கு
சலுகை தரக்கூடாது என்பது சரியான முடிவுதான்.
மேலும், பிற திட்டங்களில் பலன்பெறுவோரும்
விலக்கப்பட்டுள்ளனர்.
இதனால்,
ஒருவரே அரசிடம் இருந்து இருவேறு
வகையில் பலன் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது’’
என்றார். பொருளாதார வல்லுனர் ஒருவர் கூறுகையில், ‘‘அனைவருக்கும்
வங்கி கணக்கு அளிப்பதும் அதன்மூலம்
காப்பீடு வசதி தருவதும் சரியான
துவக்கம்தான்.
அதேநேரத்தில்,
குடும்பத்தில் இருவருக்கு காப்பீடு அளிக்கும் வகையில் இதை விரிவுபடுத்தினால்
நல்லது. பல ஏழை குடும்பங்களில்
வாழ்வாதாரத்துக்காக இருவருமே வேலைக்கு செல்லும் நிலை உள்ளது’’ என்றார்.
மேலும் .....
No comments:
Post a Comment