காங்கிரஸ்
கட்சியில் இருந்து விலகிய முன்னாள்
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,
'தமிழ் மாநில காங்கிரஸ்' கட்சியை
வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
முன்னாள்
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தற்போது புதிய
கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சியின் கொடியை அவர் நேற்று
முன்தினம் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் பெயர் மற்றும் சின்னம்
அறிமுக பொதுக்கூட்டம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில்
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.
இந்தக்
கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், "இன்றைய தினம் தமிழ்
மாநில காங்கிரஸ் (மூப்பனார்) இயக்கம் தொடங்கப்படுகிறது. தமிழர்களின்
நம்பிக்கைக்குரியவர்களாகவும்,
தொண்டர்களாகவும் செயல்படுவோம். தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்துவதற்கு
தமிழ் மாநில காங்கிரஸ் பாடுபடும்"
என்றார்.
மேலும்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்
சின்னமாக சைக்கிள் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment