ஒரே படத்தில் பல கதைகள் சொல்லும்
புதுபாணி கோலிவுட்டில் அதிகரிக்கிறது.சில வருடங்களுக்கு முன்
கே.பாலசந்தர் ‘ஒரு வீடு இரு
வாசல்‘ படத்தை இயக்கினார். இதில்
2 கதைகள் உள்ளடக்கி இருந்தது. சமீபத்தில் நடிகர் லாரன்ஸ் ‘ஒரு
டிக்கெட்ல ரெண்டு சினிமா‘ என்ற
படத்தை அறிவித்தார். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரே படத்தில் 2 கதை
அம்சம் கொண்ட படமாக ‘டூரிங்
டாக்கிஸ்‘ படத்தை இயக்கி வருகிறார்.
அந்த வரிசையில் ஒரே படத்தில் 5 கதைகளை
உள்ளடக்கிய படமாக உருவாகிறது ‘ஆ‘.
இதுபற்றி இப்பட இரட்டை இயக்குனர்கள்
ஹரி-ஹரிஸ் கூறியது:
ஓர் இரவு என்ற படத்தையடுத்து
அம்புலி என்ற படத்தை 3டி
படமாக இயக்கினோம். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
அந்த நம்பிக்கையில் தற்போது ‘ஆ‘ என்ற திகில்
படத்தை இயக்கி உள்ளோம். இது
பேய் படமாக உருவாகிறது. நடுகடல்,
பாலைவனம், ஹைவேஸ், ஏடிஎம் மையம்
உள்ளிட்ட 5 இடங்களில் நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின்
சப்ஜெக்ட். இதில் கோகுல், சிம்ஹா,
மேக்னா, மோனிசா பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி,
ஸ்ரீஜித் நடித்திருக்கின்றனர். லோகநாதன், ஜனநாதன், ஸ்ரீனிவாஸ் தயாரித்திருக்கின்றனர். கே.வெங்கட்பிரபு இசை
அமைத்திருக்கிறார். வெளிநாடுகளில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு
நடந்துள்ளது.இவ்வாறு இயக்குனர்கள் கூறினர்
.
No comments:
Post a Comment