திரிஷா மீதான கோபத்தால்
சக ஹீரோயின்களை புகழ்கிறார் ராணா.திரிஷா-ராணா நீண்ட நாட்களாக நெருக்கமான நட்புடன் பழகி
வந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் மோதல்
ஏற்பட்டது. ராகினி திவேதியுடன் ராணா பழகுவதாகவும், இந்தி நடிகை பிபாஷா பாஸுவுடன் நெருக்கம்
காட்டுவதாகவும் அவர் மீது கோபப்பட்டு திரிஷா பிரிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மறைமுகமாக
ராணாவை தாக்கியும் இணையதள பக்கத்தில் மெசேஜ் போட்டார். இதற்கிடையே தயாரிப்பாளர் வருண்
மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் கோபமான
ராணா, தற்போது திரிஷாவை கடுப்பேற்றும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
சமீபத்தில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த
ராணா,‘ஒவ்வொரு வார இறுதியிலும் சமந்தாவுடன் நான் பார்ட்டிக்கு போக விரும்புகிறேன்.
டேட்டிங்கிற்கு அவரே பெஸ்ட். நான் சந்தித்த மனிதர்களில் அனுஷ்காதான் மிகச் சிறந்தவர்'
என்று கூறி திரிஷா மீதான தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment