நம் நாட்டில் பெண்கள் விலங்குகளைப்போல நடத்தப்படுகிறார்கள்
என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
இதுகுறித்து
அவர் விழா ஒன்றில் பேசுகையில்,
''நான் ஒரு பெண்ணாக இருப்பதால்,
எனது வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை எதிர்க்கொண்டிருக்கிறேன்.
அதேநேரம், ஒரு ஆணாக இருந்திருந்தால்
சில சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும்.
நமது விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பனானந்தா சோனா தற்போது விளையாட்டுக்கு
நிறைய துணை புரிந்து வருகிறார்.
அதை நான் தனிப்பட்ட முறையில்
பார்த்திருக்கிறேன். அதிகமான பெண்கள் விளையாட்டு
துறைக்கு வரவேண்டும்.
நம் நாட்டில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.
அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அது சரி
இல்லை. இந்த சிந்தனை மாற
வேண்டும். பெண்களும் நம்மைப் போல வேலைக்காக
வெளியே போக வேண்டியுள்ளது என
ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில்,
பெண்களும் தங்களது சொந்த மதிப்பை
உணர்ந்து நடக்க வேண்டும்.
தற்போது
அரசு, சமூகத்தில் பாலின சமத்துவமின்மை குறித்து
பேசிவருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கலாச்சாரம் மாறவேண்டுமென்றால், ஊடகங்கள் அதன் பொறுப்பை எடுத்துக்
கொள்ள வேண்டும். ஒருநாள் ஆணும், பெண்ணும்
சமம் என்று சொல்வார்கள். பெண்கள்
ஒரு பொருளாக நடத்தப்பட மாட்டார்கள்''
என்றார்.
No comments:
Post a Comment