கதைக்கு
தக்கபடி தனது தோற்றத்தை மாற்றிக்
கொள்ளும் நாயகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
அறிமுகமான
சமயத்திலேயே சூது கவ்வும் படத்தில்
40 வயதுக்காரராக நரை முடி தோற்றத்தில்
துணிந்து நடித்திருந்தார். தற்போது அதைத்தொடர்ந்து புதிய
படமான ஆரஞ்சு மிட்டாய் படத்திலும்
55 வயது முதியவர் வேடம் ஏற்றிருக்கிறார் விஜய்
சேதுபதி. அதுவும் நோய் வாய்ப்பட்ட
தாத்தாவாக. இப்படத்தை பிரபல இயக்குனர் பிஜூ
விஸ்வநாத் இயக்கியுள்ளார். இவர், ஆங்கிலம், ஹிந்தி,
மலையாளம், ஸ்பானிஷ், ஜப்பான் உள்ளிட்ட பல
மொழிகளில் வெற்றிப் படங்களை இயக்கி, பல
விருதுகளை வாங்கிக் குவித்தவர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக
அர்ஷிதா நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் விஜய் சேதுபதியே.
இந்நிலையில்
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தின் டீசர் கடந்த 26ம்
தேதி இரவு வெளியிடப்பட்டது. இது
மிகவும் வித்தியாசமான முறையில் வந்துள்ளது. விஜய் சேபதியே தன்
படத்தைப் பற்றி சொல்வது போலவும்,
அதை இன்னொரு விஜய் சேதுபதி
இடையிடையே புகுந்து கலாய்ப்பதைப் போலவும் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு ரசிகர்கள்
மத்தியில் மட்டுமின்றி, திரையுலக நட்சத்திரங்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்து
வருகிறது.
டீசர் வெளியான 14 மணி நேரத்தில் 1 லட்சம்
பார்வைகளைக் கடந்தது. தற்போது அதுவே 36 மணி
நேரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது.
விஜய் சேதுபதி நடித்த படங்களின்
டீசரைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை.
இந்த டீசரைப் பார்த்து நடிகர்
தனுஷ் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர்
தனது டுவிட்டரில், ‘‘தொடர்ந்து ஒவ்வொருமுறையும் வித்தியாசமான முயற்சிகளை செய்கிறார் விஜய் சேதுபதி. அவரை
நினைக்க பெருமையாக இருக்கிறது!’’ என்று குறிப்பிட்டுள்ளார். கூடனே
ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீசரையும் பகிர்ந்திருக்கிறார்.
மேலும்....
மேலும்....
No comments:
Post a Comment