ரஜினியின்
லிங்கா படத்துக்கு சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இசை அமைத்துள்ளார்
ஏ ஆர் ரஹ்மான்.
கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில்
உருவாகியுள்ள லிங்கா படம் சென்சார்
முடிந்து யு சான்று பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட
3 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு
படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள்
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக
ஆடியோ சிடி விற்பனை என்பதே
இல்லாமல் போய்விட்ட இந்த காலகட்டத்தில், லிங்கா
சிடிக்கள் விறுவிறுப்பாக விற்று வருகின்றன. டிசம்பர்
12-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்
படத்தை விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி
வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் குறித்து
தகவல் வெளியாகியுள்ளது. அது ஏஆர் ரஹ்மானின்
பின்னணி இசை. இந்தப் படத்தின்
சில பகுதிகளுக்கு மட்டும் மாசிடோனியன் ரேடியோ
சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு, சிம்பொனி இசை
தந்திருக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.
கமலின்
ஹே ராமுக்காக இளையராஜா முன்பு ஹங்கேரிக்குப் போய்
சிம்பொனி இசை அமைத்தார். அவருக்குப்
பிறகு, ஏ ஆர் ரஹ்மான்
இப்போது ரஜினி படத்துக்கு சிம்பொனி
இசையை பின்னணியாகத் தருகிறார்.
No comments:
Post a Comment