Friday, November 28, 2014

பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி

பேரரசு இயக்கும் படம் ‘திகார்'. பார்த்திபன், உன்னி முகுந்தன், அகன்ஷாபுரி நடிக்கின்றனர். ஷபீர் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ நேற்று வெளியிடப்பட்டது. திகார் சிறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற கிரண்பேடி ஐபிஎஸ் ஆடியோவை வெளியிட கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்துகொண்டு மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவத்தை நக்கல், நையாண்டியோடு விவரித்து பேசினார். "ஜெயில்ல இருந்த 1200 போலீஸ்காரங்களும் எனக்கு ரசிகர் ஆயிட்டாங்க" என அவர் பேசியதை கேட்ட கிரண்பேடி கோபம் அடைந்தார்.


பிறகு கிரண்பேடி பேசும்போது, ‘திகார் சிறையில் நான் கைதிகளுக்கு கல்வி போதிச்சேன். இங்க பேச¤ன நடிகர் போலீஸ்காரங்க அவருக்கு ரசிகர்கள் ஆயிட்டதா சொன்னார். திகார் போலீஸ் அப்படிபட்டவங்க இல்லை. டாக்டருக்கு படிச்சதா சொல்ற நடிகர், மத்தவங்களுக்கு டீச்சரா இருக்கணும். சீட்டிங் பண்ணக்கூடாது' என்று ஒரே போடாக போட்டார். இதைக்கேட்ட சீனிவாசன் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.


No comments:

Post a Comment