கிரிக்கெட்
பந்து தாக்கி தலையில் பலத்த
காயம் அடைந்த ஆஸ்திரேலியா வீரத்
ஹியூஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு ரசிகர்களுக்கு
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில்
நடந்து வரும் முதல்தர கிரிக்கெட்
போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா- நியூ
சவுத் வேல்ஸ் அணிகள் இடையிலான
ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலிய அணியின்
தொடக்க ஆட்டக்காரரான இடக்கை பேட்ஸ்மேன் பிலிப்
ஹியூஸ் 63 ரன் எடுத்திருந்தபோது, எதிரணியின்
இளம் பவுலர் சீன் அப்போட்
வீசிய வேக பந்துவீச்சில் காயமடைந்தார்.
எகிறி வந்த பந்தை அவர்
அடிக்க முயற்சித்த போது, பந்து தலையின்
இடது பக்கத்தில் பயங்கரமாக தாக்கியது.
பவுன்சர்
பந்து தாக்கியதில் நிலைகுலைந்து போன அவர் மைதானத்தில்
சுருண்டு விழுந்தார். (அந்த வீடியோ பார்க்க) சுயநினைவை இழந்து ‘கோமா’ நிலைக்கு
சென்ற ஹியூஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில்
எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் ஆம்புலன்ஸ் மூலம் சிட்னியில் உள்ள
செயின்ட் வின்சென்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர
சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்,
இந்திய நேரப்படி காலை 10.20 மணிக்கு ஹியூஸ் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலியா
பிரதமர், வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
25 வயதான
பிலிப் ஹியூஸ், ஆஸ்திரேலியாவின் வளர்ந்து
வரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்டில் விளையாடி 3 சதம் உள்பட 1,535 ரன்களும்,
25 ஒரு நாள் போட்டிகளில் ஆடி
2 சதங்களுடன் 826 ரன்களும் சேர்த்துள்ளார். இதே போல் 114 முதல்தர
ஆட்டங்களில் 26 சதங்கள் உள்பட 9,023 ரன்கள்
குவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு
எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்
உடல்தகுதியை எட்டாமல் போகும் பட்சத்தில், அவரது
இடத்தில் பிலிப் ஹியூஸ் விளையாட
பிரகாசமான வாய்ப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment