ஹியுஸ்
மரணத்துக்கு ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததும் ஒரு
காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில்
நடக்கும் முதல் தர போட்டி
‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில்
நியூ சவுத் வேல்ஸ், தெற்கு
ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது,
சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’,
தெற்கு ஆஸ்திரேலிய வீரர் பிலிப்
ஹியுஸ், 25, தலையில் பலமாக
தாக்கியது.
ஹியுஸ்
அடிபட்ட 6வது நிமிடத்தில், மதியம்
2.29 மணிக்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், வர தாமதம் ஆனதால்
(2.53க்குத் வந்தது). அடுத்து 8வது நிமிடம் (2.37 மணி)
அழைக்கப்பட்ட மற்றொரு ஆம்புலன்ஸ் 2.44க்கு
வந்து விட்டது.
ஒரு வழியாக ஹியுஸ் அடிபட்டு,
ஒரு மணி நேரத்துக்குப் (3.30 மணி)
பின் தான், மருத்துவமனைக்கு கொண்டு
வரப்பட்டார். மாலை 4.15 மணிக்கு அவசர ஆப்பரேஷன்
செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவில்
அவசர அழைப்பு விடப்பட்ட, 8 நிமிடத்தில்
குறிப்பிட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ் வர வேண்டும். இங்கு,
முதல் ஆம்புலன்ஸ் வர 23 நிமிடம் தாமதம்
ஆனது. இது கூட ஹியுஸ்,
மரணத்துக்கு காரணமாக இருக்கும் என்று
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment