Sunday, November 30, 2014

பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி

பாகிஸ்தான் நடிகர் பவாத் கான், ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ள சோனாக்ஷி சின்காவுடன் ஜோடி சேர போகிறாராம்.

பாலிவுட்டில் வெளியான ஹுப்சூரத் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் வரவேற்பை பெற்றவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத்கான்.

இப்போது பாலிவுட்டில் கவிஞர் அம்பிரித்தா பிரீதம் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட உள்ள திரைப்படத்தில் நடிக்க உல்ளார். அப்படத்தில் பெண் கவிஞர் அம்பிரித்தாவாக நடிக்க உள்ளவர் சோனாக்ஷி சின்கா.

 சோனாக்ஷி அடுத்த மாதம் வெளியாக உள்ள லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். எனவே ரஜினிகாந்த் ஜோடி நடிகை பாகிஸ்தான் நடிகரின் ஜோடியாக போவதால் இரட்டிப்பு எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.




No comments:

Post a Comment