மதத்தை
அவமதித்ததாகக் கூறி தனக்கு பாகிஸ்தான்
நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதை
கேட்டு நடிகை வீணா மாலிக்
அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும்
தான் எந்த வகையிலும் மதத்தை
அவமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் பாகிஸ்தானில்
ஒளிபரப்பான டிவி நிகழ்ச்சியில் மத
பாடல்களை போட்டுக் கொண்டு அந்நாட்டு நடிகை
வீணா மாலிக், அவரது கணவர்
பஷீர் போலியாக திருமணம் செய்து
கொண்டனர்.
இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை
விசாரித்த கில்கிட்-பால்திஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வீணா
மாலிக், அவரது கணவர் உள்பட
4 பேர் மதத்தை அவமதித்ததாகக் கூறி
அவர்களுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.3 மில்லியன்
பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை கேட்டு துபாயில் வசித்து
வரும் வீணா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
அதிர்ச்சி
இந்த தீர்ப்பை கேட்டு நான் கடும்
அதிர்ச்சி அடைந்துள்ளேன். தீர்ப்பளித்த நீதிமன்றம் பாகிஸ்தானின் பிற நீதிமன்றங்களில் இருந்து
தனியாக செயல்படக் கூடியது. எனக்கு பாகிஸ்தானின் உயர்
நீதிமன்றங்கள் மற்றும் நீதித் துறை
மீது முழு நம்பிக்கை உள்ளது.
பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட
பல மேல் நீதிமன்றங்கள் உள்ளன.
டிவி நிகழ்ச்சியில்
அளிக்கப்படும் வசனங்கள், கதைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள்
கூறியபடி நடித்தோம், அவ்வளவு தான். இதற்காக
எங்கள் மீது இதுவரை 100 வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை மூலம் எனக்கு குழந்தை
பிறந்தது. அதில் இருந்து குணமடைந்து
வருகிறேன். 3 மாதங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான்
என் உடல் நலம் தேறியதும்
டிசம்பர் மாதம் பாகிஸ்தான் செல்ல
உள்ளோம். நான் எந்த தவறும்
செய்யவில்லை. அதனால் தான் வழக்கை
சந்திக்க பாகிஸ்தான் செல்கிறேன். அவர்கள் கூறுவது போல்
இது எந்த வகையிலும் மத
அவமதிப்பே கிடையாது.
நான் முஸ்லீமாக பிறந்தேன். நான் எந்த தவறும்
செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
என்றார் வீணா.
No comments:
Post a Comment