அதிமுக,
திமுக, பாஜக, காங்கிரஸை தனித்துவிட்டு
விஜயகாந்த், ஜி.கே.வாசன்
தலைமையில் கூட்டணியை அமைத்து தமிழக சட்டசபை
தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
2016 தமிழக
சட்டசபை தேர்தலில், தி.மு.க,
அ.தி.மு.க இல்லாத அணி
ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள்.
விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும்
அதில் இணைக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,
ஆம் ஆத்மி ஆகிய நான்கு
கட்சிகளையும் இதனுடன் இணைக்கலாம் என்ற
திட்டமும் உள்ளதாம்.
இந்த கூட்டணியின் பெயர் 'ஊழல் எதிர்ப்பு
அணி' என்று இருக்கும் என்ற
பேச்சு அடிபடுகிறது. ஜி.கே.வாசனும்
விஜயகாந்தும் எப்போதும் தோழர்கள்.
விஜயகாந்தும்
வைகோவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
அண்ணன்-தம்பி என்று அழைத்துக்
கொண்டனர். வைகோவின் வீட்டுக்கே சென்று நெகிழ்ச்சி காண்பித்தார்
விஜயகாந்த்.
எனவே கருத்தொற்றுமை உள்ள இப்படி ஓர்
அணி அமையும்போது புதிய கட்சிகளும் தயங்காமல்
ஒன்று சேரும் என்ற எதிர்பார்ப்பு
ஒன்றிணைப்பாளர்களுக்கு உள்ளது. ஆக, தி.மு.க., அ.தி.மு.க.,
பாஜக, காங்கிரஸ் அல்லாத அணியாக அமையப்போகிறது.
எனவே, தமிழகத்தில் பலமுனை போட்டி உருவாக
வாய்ப்பு உள்ளது என்பது நிச்சயமாகிறது.
ஆனால் இவையெல்லாம் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளன. திட்டம் படிப்படியாக
செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
மேலும் ....
No comments:
Post a Comment