பெற்றோரிடம்,
இருமுறை விலை பேசி வாங்கப்பட்ட
மூன்று சிறுமியரை, நிர்வாணப்படுத்திய, கொடுமை சம்பவம், பெங்களூரில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாருக்கு
தகவல் :பெங்களூரு, விக்டோரியா லே - அவுட், பாம்குரோவ்
ரோட்டில், மூன்று மாடி கட்டடத்தில்,
௧௩, ௧௪, ௧௫ வயதுடைய
மூன்று சிறுமியர், தினமும், 12 மணி நேரம், கொத்தடிமைகளாக
வேலை வாங்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து,
சாதிக் அகமது, 28, அவரது மாமனார் அஸிஸுல்லா
கான், 51 ஆகியோரை கைது செய்த,
சென்ட்ரல் டிவிஷன் போலீசார், சிறுமியரை
மீட்டனர்.
விசாரணையில்,
மூன்று ஆண்டுகளுக்கு முன், பல்லாரியில் வசித்து
வரும் அஸிஸுல்லா மனைவி மூலமாக, மூன்று
சிறுமியரையும், அவர்களின் பெற்றோரிடம் இருந்து, தலா, 20 ஆயிரம் ரூபாய்
கொடுத்து அழைத்து வந்துள்ளனர்.
பின், இவர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட சிறுமியர் மூவரும், பல்லாரியில் உள்ள அவர்களின் பெற்றோரிடமே,
குழந்தைகள் நலத்துறையும், தொண்டு நிறுவனம் ஒன்றும்
ஒப்படைத்தன.
ஆனால்,
அஸிஸுல்லாவின் மனைவி மூலம் இம்மூன்று
சிறுமியரையும், இரண்டாவது முறையாக, தலா, ௫,௦௦௦
ரூபாய் கொடுத்து அழைத்து வந்த சாதிக்
அகமது தன் வீட்டில், மூன்று
பேரையும் அடைத்து வைத்துள்ளார்.
அவர்களை,
மதம் மாற்றியதுடன், வேறு மொழி படிக்கும்படி
கூறி தண்டித்துள்ளார். மேலும், சிறுமியர் மூவரையும்
நிர்வாணப்படுத்தி, தானும் நிர்வாணமாக இருந்து,
அச்சிறுமியரை கட்டிப்பிடிக்க சொல்லி துாண்டியுள்ளார்.இதுகுறித்து,
கடந்த, 22ம் தேதி, போலீசாருக்கு
தகவல் கிடைத்துள்ளது. சிறுமியரை மீட்ட போலீசார் மற்றும்
குழந்தைகள் நலத்துறையினர், பெங்களூரு - ஓசூர் ரோட்டிலுள்ள, அரசு
குழந்தைகள் காப்பகத்தில் மூன்று குழந்தைகளையும் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சாதிக் அகமது, அஸிஸுல்லா
ஆகியோர் மீது, இளம் குற்றவாளிகள்
சட்டப்படியும், குழந்தைகள் பாலியல் பலாத்கார தடுப்பு
சட்டத்தின் படியும் வழக்கு பதிந்து,
போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment