கே.எஸ்.ரவிகுமார்
இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிப்பில் டிசம்பர்
12ல் வெளியாக உள்ள படம் ‘லிங்கா’.
ஏற்கனவே இப்படத்தின்
கதை என்னுடையது என சமீபத்தில் பிரச்னை கிளம்ப அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை விடப்பட்டது.
அந்த பிரச்னையே இன்னும் தீராத நிலையில் தற்போது புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.
‘லிங்கா’ படத்தில் வக்கீல்களையும்
, நீதித்துறையையும் அவமதிப்பது போல் காட்சிகளும், வசனங்களும் உள்ளன எனத் தெரியவந்துள்ளது.
அதை நீக்கவேண்டும் என்று வழக்கறிஞர் நன்மாறன் சென்சார் குழுவிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.
'' 'லிங்கா' படத்தில்
வழக்கறிஞர்களை விமர்சிக்கும் காட்சிகளுடன் படம் வெளிவந்தால் திரையுலகினருக்கும், வக்கீல்களுக்கும்
இடையே தேவையற்ற தகராறுகள் ஏற்படும் .
எனவே, சர்ச்சையான
காட்சிகளை நீக்கிவிட்டால் இப்போதே பிரச்னையைத் தவிர்க்கமுடியும். அந்த எண்ணத்தில்தான்
இந்த மனுவை அளித்திருக்கிறேன். '' என்று நன்மாறன்
புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் .....
No comments:
Post a Comment