வெளியாவதற்கு
முன்பே பல புதிய சாதனைகளைப்
படைத்து வருகிறது ரஜினியின் லிங்கா திரைப்படம்.
இந்தியத்
திரையுலக வரலாற்றில் எந்தப் படமும் ரிலீசுக்கு
முன் லிங்கா அளவுக்கு பணத்தைக்
குவித்து சாதனைப் படைத்ததில்லை. ரூ
100 கோடியில் தயாரான லிங்கா, இதுவரை
விநியோகம் மற்றும் இதர உரிமைகள்
மூலமாக மட்டும் ரூ 200 கோடிக்கு
மேல் குவித்துவிட்டது.
லிங்கா தமிழ்
சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு உலகம்
முழுவதும் 5000க்கும் அதிகமான அரங்குகளில்
வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில்
உள்ள 950 அரங்குகளில் 700 அரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சாதனையாக,
ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மொத்த தியேட்டர்களுமே
லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் - திருப்பூர் ஏரியாவில் மட்டும் மொத்தம் 93 திரையரங்குகள்
உள்ளன.
இவற்றில்
85 அரங்குகளில் லிங்காதான் ரிலீசாகப் போகிறது. இதற்கு முன் எந்த
ரஜினி படத்துக்கும் இத்தனை அரங்குகள் கோவை
ஏரியாவில் ஒதுக்கப்பட்டதில்லை. வேறு எந்தப் படத்துக்கும்
இவ்வளவு அரங்குகள் ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.
லிங்காவின்
கோவை பகுதி உரிமை மட்டும்
தனியாக விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment