முத்தபோட்டி
நடத்துவதில் தவறு இல்லை என
நடிகை குஷ்பு
பேசுவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
செயலாளர் நல்லசாமி, விடுத்துள்ள அறிக்கை: அகமும் புறமும் கொண்டதே
தமிழர்களின் வாழ்வியல் பண்பாடு.
அகம் என்பது அடுத்தவர்களுக்கு தெரியாமல் அறைகளில்
நடக்க கூடியது. புறம் என்பது எல்லாருக்கும்
தெரியும் வகையில் இருக்கும். ஒருவருடைய
வீரம், ஈகைப் பண்பு
உள்ளிட்டவற்றை எடுத்துச் கொல்வது.
முத்தமிடுவது
என்பது அக வாழ்க்கையின் ஓர்
அங்கம். நடிகை குஷ்பு முத்தப்
போட்டி நடத்துவதில் என்ன
தவறு என பகிரங்கமாக பேசி
வருகிறார். இது தமிழர்களின்
தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாகும். குடும்ப வாழ்க்கையும் கூட்டுக்
குடும்ப உறவும் இந்தியாவில்
நிலைத்திருக்க வேண்டும் எனில், குஷ்பு போன்றவர்களை
கண்டிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு நல்லசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment