ரஜினிகாந்த்
நடித்த "கோச்சடையான்' திரைப்படத்தை விநியோகம் வழங்கியதில் லதா ரஜினிகாந்த் ரூ.10.2
கோடி மோசடி செய்ததாக சென்னை
பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த்
நாகர் புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகார்
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர்
ரஜினி நடித்த "கோச்சடையான்' திரைப்படம் கடந்த மே மாதம்
வெளியானது. இந்தத் திரைப்படத்தின் தமிழக
உரிமையை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்
முரளி மனோகர் கடந்த ஏப்ரல்
25ம் தேதி எனது நிறுவனத்துக்கு
அளித்தார்.
இதற்கான
ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும்
கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்த்
மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார்.
இதையடுத்து, இந்த உரிமத்துக்குரிய தொகையை
நான் முரளி மனோகருக்கு அளித்தேன்.
இந்த ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் "கோச்சடையான்'
திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும்
அளிக்கக் கூடாது. அதைமீறி தமிழகத்தில்
வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட
ஈடு வழங்க வேண்டும். குறிப்பாக
விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்
என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால்,
அந்த ஒப்பந்ததை மீறி முரளி மனோகர்
வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து
உரிமைகளையும் விற்றார். இதையடுத்து நான் அவர்களிடம் எனக்குரிய
நஷ்டஈட்டுத் தொகையைக் கேட்டபோது, லதா ரஜினிகாந்தும், முரளி
மனோகரும் என்னிடம் படம் வெளியானதும் அந்தத்
தொகையைத் தருவதாக உறுதி அளித்தனர்.
நான் அவர்கள் மீது
வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன்.
ஆனால் படம் வெளியாகி ஓடி
பல மாதங்களுக்குப் பின்னரும், அவர்கள் எனக்குத் தர
வேண்டிய ரூ. 10.2 கோடியைத் தரவில்லை. நான் எனது பணத்தை
பல முறை அவர்களிடம் கேட்டும்,
அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.
எனவே காவல்துறை அவர்கள் மீது தகுந்த
நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர
வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment