பாகிஸ்தானுக்கு
எதிராக ஷார்ஜாவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில்
பிரெண்டன் மெக்கல்லம் 186 பந்துகளில் 202 ரன்கள் எடுத்து டெஸ்ட்
கிரிக்கெட் அரங்கில் தனது 4-வது அதிவேக
இரட்டைச் சதத்தை பதிவு செய்ததன்
மூலம் பிதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்
. முன்னதாக 78 பந்துகளில் சதம் கண்டு ராஸ்
டெய்லர் வைத்திருந்த 81 பந்துகள் சத சாதனையை முறியடித்த
பிரெண்டன் மெக்கல்லம், 3-ஆம் நாளான இன்று
தொடர்ந்து அதிரடியாக விளையாடி 186 பந்துகளில் இரட்டை சதமடித்தார். 188 பந்துகளில்
21 பவுண்டரி, 11 சிக்சர் என 202 ரன்கள்
எடுத்து ஆட்டமிழந்தார்.
நேதன் ஆஸ்ட்ல் 151 பந்துகளில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த இரட்டை
சதமே இன்றும் உலக சாதனையாக
இருந்து வருகிறது. மேலும் அணியில் 4 இரட்டைச்
சதங்கள் எடுத்த ஒரே வீரர்
என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார். மேலும்
ஒரே ஆண்டில் 3 இரட்டைச் சதமும் அடித்த 4-வது
வீரராகவும் உள்ளார். முன்னதாக டான் பிராட்மேன், ரிக்கி
பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் ஒரே ஆண்டில்
மூன்று சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment