திருமணத்துக்கு
தயார் ஆவதால் புது படங்களிலிருந்து விலகி வருகிறார் திரிஷா.நடிகர் ராணாவுடன் ஏற்பட்ட
காதல் தோல்விக்கு பிறகு, பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்
நடந்தது. அடுத்த ஆண்டு அவர்கள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெய்யுடன்
நடிக்க இருந்த படத்திலிருந்து திரிஷா விலகினார். இதேபோல் மலையாளத்தில் நடிக்க இருந்த
ஒரு படத்திலிருந்தும் அவர் விலகிஉள்ளார்.
இந்நிலையில் திருமணம் பற்றி திரிஷா கூறியதாவது:
என் குடும்பத்தில்
எல்லோரும் படித்தவர்கள். வெளி நாடுகளில் செட்டிலாகி உள்ளனர். எனவே நான் வேறு துறையாக
நடிப்பை தேர்வு செய்தேன். இதைவிட்டுவிட்டு இனிநான் வேறு வேலைக்கு செல்ல முடியாது.
தயாரிப்பாளர் வருண்
மணியனுடன் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா என்கிறார்கள். வருண் மணியன் எனக்கு நெருங்கிய
நண்பர். இது பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது.
ராணாவுடன் காதல்
தோல்வியா என்கிறார்கள். நான் ஒருவருடன் எந்த உறவிலும் இல்லை என்று கூறும்போது அவருடன்
பிரிந்துவிட்டதாக கூறுவது இயல்பு, இதற்கு இப்போது நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? இதுபற்றி
எதுவும் என்னால் கூற முடியாது. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இருக்கிறது. அது நடக்கும்போது
எல்லோருக்கும் தெரிவிப்பேன். அதுவரை எனக்கு எல்லாமே சினிமாதான்.
No comments:
Post a Comment