நடிகர் பார்த்திபன்
எத்தனை படங்களில் நடித்தாலும் தானொரு இயக்குனர் என்ற அந்தஸ்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.
இண்டஸ்ட்ரிகாரர்கள்
முற்றிலுமாகவே மறந்துபோயிருந்த இயக்குனர் ருத்ரய்யாவை மறக்காமல் தான் இயக்கிய ‘கதை
திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடிப்பதற்காக அழைத்தார்.
அப்போது அவரிடம்
பேசிய பார்த்திபன்,‘உங்களைப்போன்ற இயக்குனர்கள் ஒதுங்கி இருக்கக்கூடாது. நீங்கள் இயக்குவதாக
இருந்தால் என் சக்திக்கு ஏற்ப ஒரு படத்தை நானே தயாரிக்கிறேன்' என்றார். அதற்கு ருத்ரய்யா,
‘நேரில் வரும்போது அதுபற்றி பேசுகிறேன்‘ என்றார்.
இந்த சந்திப்பு
நடப்பதற்குள் ருத்ரய்யா இறந்துவிட்டார். வேதனை அடைந்த பார்த்திபன் அவரது நினைவாக ஏதாவது
செய்ய வேண்டும் என்று யோசித்தவர் ருத்ரய்யா உருவப்படத்தை பெரிதாக பிரேம்போட்டு அதை
இயக்குனர்கள் சங்கத்தில் மாட்டி வைக்கும்படி அளித்தார்.
இதேபோல் சாதனை படைத்த இயக்குனர்கள் நினைவாக சங்கத்தில்
அவர்களது படங்களை மாட்டி கவுரவிக்க வேண்டும் என்றுகேட்டுக்கொண்டிருக்கிறார். பார்த்திபனின்
இந்த செயலால் சங்கத்தில் உள்ள சிலர் கடுப்பாகி இருக்கிறார்களாம். இவர் சொல்வதை நாம்
கேட்க வேண்டுமா என முணுமுணுக்குகிறார்களாம்.
No comments:
Post a Comment