‘லிங்கா' படத்தில்
அனுஷ்காவைவிட சோனாக்ஷிக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.கோலிவுட் படங்களை பொறுத்தவரை
ஹீரோவை சுற்றித்தான் கதைக்களம் அமைக்கப்படுகிறது. ரஜினி படமென்றால் அவர் ஒருவர்தான்
படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துவார்.
அதேசமயம் ‘சந்திரமுகி‘ படத்தில் ஜோதிகா,
‘படையப்பா‘
படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. ‘லிங்கா‘ படத்தை பொறுத்தவரை
அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா என டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் காட்சிகளை (ரஷ்) பார்த்த சிலர் அனுஷ்காவைவிட
சோனாக்ஷி சின்ஹாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். ரஜினியின்
பிளாஷ் பேக் காட்சி அணை கட்டும் பகுதியாக இடம்பெறுகிறது.
இந்த காட்சியில்தான் சோனாக்ஷி வருகிறார். வரலாற்று
பின்னணி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் இதில் சோனாக்ஷி அதிரி புதிரியாக நடித்திருக்கிறாராம்.
ரஜினிக்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் அவர் கலக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் அனுஷ்கா
தென்னிந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்ததால் இப்படத்தில் நகரத்து பெண்ணாக
வழக்கமான ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.
எந்த ஹீரோயினுக்கு
எவ்வளவு முக்கியத்துவம் என்பது முக்கியமில்லை. படம் முழுக்க ரஜினி வருகிறாரா என்றுதான்
ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்ப்பார்கள். அதற்கு சரியான தீனி படத்தில் இருக்கிறது என்றும்
படத்தின் ரஷ் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.
No comments:
Post a Comment