Friday, November 28, 2014

முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்

பிலிப் 1988ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்தார். தனது 26-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். குறைந்த வயதில் பிலிப் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,535 ரன் எடுத்துள்ளார்.

 அவற்றில் 3 சதங்களும், 7 அரை சதங்களும் அடங்கும். கடந்த ஜூலை 2013ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் இறுதியாக டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளார். இதுவரை 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றவர்.


அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் 12ம் தேதி அவர் விளையாடியதே இறுதி ஒருநாள் போட்டியாக இருந்தது. அதன்பின் அதே அணிக்கு கடந்த மாதம் 5ம் தேதி துபாயில் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

No comments:

Post a Comment