Saturday, November 29, 2014

குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி

தி.மு..,வில் இருந்து விலகி, அமைதியாக இருந்த நடிகை குஷ்பு, திடீரென்று காங்கிரசில் இணைந்தார். இதன் பின்னணியில் நடந்த விவரங்கள் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமைதியானார்:

லோக்சபா தேர்தல் நேரத்தில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட, நடிகை குஷ்பு, 'சீட்' எதிர்பார்த்தார்; கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தேர்தலில் தி.மு.., தோல்வி அடைந்த பின், கட்சியில் இருந்து விலகி அமைதியானார். சமீபகாலமாக, தமிழகத்தின் பிரதான கட்சிகளில் இருந்து, அவரை கட்சியில் சேர அணுகினர். ஆனால், எல்லா தரப்பினரிடமும் பேசி வந்த நடிகை குஷ்பு, யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில், அவர் காங்கிரசில் இணைய முடிவெடுத்து, நேற்று முன்தினம் காங்கிரசில் இணைந்து விட்டார். இதன் பின்னணியில், பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவித்தார்:

இதுகுறித்து, காங்., வட்டாரங்களில் கூறியதாவது: குஷ்பு தி.மு..,வில் இருந்து விலகியதுமே, அவரை காங்கிரசில் சேர்க்க முடிவெடுத்தோம். அந்த
சூழ்நிலையில், அவர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார். சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். இருந்தாலும், சமூக ரீதியிலான, தன் கருத்துக்களை தொடர்ந்து, 'டுவிட்டர்' பக்கம் மூலம் தெரியப்படுத்தி கொண்டே வந்தார். அதில் சில இடங்களில், தன் அரசியல் ஆர்வம் குறித்து அவர் சொல்ல, மீண்டும் அவரை காங்., தரப்பில் அணுகினோம். இந்த தகவல் அறிந்ததும், பா.., தரப்பில் இருந்தும், குஷ்புவை தொடர்பு கொண்டனர்.

ஆனால், 'பா.., மீது எனக்கு வெறுப்பு எதுவுமில்லை; ஈர்ப்பும் இல்லை. அக்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், அங்கே எனக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என, தெரியவில்லை. இனி, நான் எங்கிருந்தாலும், எனக்கு முக்கியத்துவம் வேண்டும்; தற்போது, காங்., தோற்றிருக்கிறது. அந்த கட்சியில் இணைந்தால், எனக்கு அதீத முக்கியத்துவம் இருக்கும். என்னால் கட்சிக்கும், கட்சியால் எனக்கும் நன்மையாக இருக்கும்' என, தெளிவாக சொல்லி அனுப்பி விட்டார். எவ்வளவோ முயற்சித்தும், அவர் பிடிகொடுக்கவில்லை. இந்த தகவலறிந்ததும், காங்., சார்பில், சினிமா இயக்குனர் ஒருவரை அனுப்பி பேச வைத்தோம். அவர் பேசியதும், கட்சியின் தலைவரை சந்திக்க விரும்பினார். அந்த வகையில்தமிழக காங்., தலைவர் இளங்கோவன், அவரிடம் பேசினார்.

முக்கிய பதவி:

இந்த தகவலை, சோனியா மற்றும் ராகுலுக்கு, கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலமாக, இளங்கோவன் கொண்டு சென்றார். அவர்களும், குஷ்பு வருகைக்கு பச்சைக்கொடி காட்டினர். கூடவே அவருக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ள பதவி கொடுக்கவும், மேலிடத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டது. இதை, குஷ்புவிடம் சொன்னதும், அவர் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள, முழு ஆர்வம் தெரிவித்தார். இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.

துணை தலைவர் பதவி?


தேர்தல் பிரசாரம், மேடை பேச்சு அனுபவம் குஷ்புவுக்கு உண்டு. எனவே, தமிழக காங்., துணை தலைவர் அல்லது செய்தி தொடர்பாளர் பதவி, குஷ்புவுக்கு வழங்க மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் திட்டமிட்டுள்ளதாக, தகவல் பரவி இருக்கிறது. கட்சியின் கொள்கை களை விளக்கும் வகையில், 'டிவி' மீடியாக்களில், குஷ்புவை விவாதங்களில் பங்கேற்க, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.


மேலும்.... 


சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ரவிக்குமார் அழைப்பு
உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்


பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ


No comments:

Post a Comment