இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது பட்டியலில்
இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் பெயர்
பரிசீலிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அவர்
பெயர் நீக்கப்பட்டது. அவர் ஊக்கமருந்து சோதனையில்
சிக்கியவர் என்ற தவறான தகவலால்
அவரது பெயர் விடுபட்டது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் டெல்லி ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து அவரையும்
அர்ஜூனா விருது பட்டியலில் சேர்த்துக்
கொள்வதாக மத்திய அரசு உறுதி
அளித்தது. இந்த நிலையில் அவருக்கு
அர்ஜூனா விருதை மத்திய விளையாட்டுத்துறை
மந்திரி சர்பானந்தா சோனோவல் நேற்று வழங்கினார்.
பின்னர்
மனோஜ்குமார் கூறும் போது, ‘குத்துச்சண்டையில்
சிறப்பாக செயல்படுவதே எனது வேலை. நான்
செய்த சாதனைக்கு இந்த விருதுக்கு தகுதியானவன்.
ஆனால் எனது பெயரை புறக்கணித்து
விட்டனர். என் மீது யார்
தவறாக ஊக்கமருந்து சர்ச்சையை கிளப்பியது என்று தெரியவில்லை.
பிறகு விருது கமிட்டித் தலைவரான
இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் என்னை
அழைத்து பேசினார். என்னை பற்றிய விவரங்களை
அவர் கேட்டார். அதற்கு நான், ‘நான்
குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார். காமன்வெல்த்
விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவன். விருது பட்டியலில் எனது
பெயரை நீக்கி விட்டு, வெண்கலப்பதக்கம்
வென்றவருக்கு அர்ஜூனா விருதை வழங்கியுள்ளீர்கள்’
என்று கூறினேன். இதை கேட்டதும் அவர்
அதிர்ச்சியுடன் என்னை பார்த்தார். எனது
பெயர் மனோஜ்குமார், காமன்வெல்த் விளையாட்டின் சாம்பியன் என்று இன்று கபில்தேவிடம்
மறுபடியும் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.
No comments:
Post a Comment