புதுடெல்லி:
ஐ.பி.எல்
அமைப்பில் இருந்து சென்னை அணியை
ஏன் நீக்கக் கூடாது என்று
கேள்வி எழுப்பி உள்ள உச்ச
நீதிமன்றம், சென்னை அணியை நீக்க
முத்கல் குழுவின் அறிக்கை ஒன்றே போதுமானது
என அதிரடியாக கூறியுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட்
சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில்
நடந்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட
முத்கல் குழு, அண்மையில் உச்ச
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
அதில், குருநாத் மெய்யப்பன், சென்னை அணியின் நிர்வாகி எனக் கூறியிருந்தது.
இந்நிலையில்,
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குருநாத்
மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியின் நிர்வாகிகளில் ஒருவர் என தெரிவித்த
பி.சி.சி.ஐ,
பின்னர், குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகி
என முத்கல் குழு கூறியதை
ஏற்பதாக தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஐ.பி.எல்
அமைப்பில் இருந்து சென்னை அணியை
ஏன் நீக்கக் கூடாது என
கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னை
அணியை நீக்க முத்கல் குழுவின்
அறிக்கை ஒன்றே போதுமானது என்று
கூறினர்.
மேலும்
ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவி
மற்றும் சென்னை அணியின் உரிமையாளர்
என இரண்டு பதவிகளை வகித்தது
குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
ஸ்ரீனிவாசன் இரண்டு பதவிகளில் ஒன்றை
கைவிட வேண்டும் என்றனர். அத்துடன் இந்த விவகாரத்தில் எழுந்துள்ள
அனைத்து சர்ச்சைகளுக்கும் பிசிசிஐ முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
அத்துடன்,
சென்னை அணியின் மீது ரூ.400
கோடி முதலீடு செய்வது தொடர்பான
முடிவை எடுத்தது யார்? என்று கேள்வி
எழுப்பிய நீதிபதிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின்
இயக்குநர்கள் யார் என்பது குறித்து
விவரத்தை பிசிசிஐ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும், இதன்மூலம்தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியின் உண்மையான உரிமையாளர் யார் என்ற விவரத்தை
நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது என்றும் கூறினர்.
மேலும்
பிசிசிஐ நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தலாம் என்றும்,
அதே சமயம் முத்கல் குழு
அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்கள் தேர்தலில்
போட்டியிடக் கூடாது என்றும், புதிதாக
தேர்வு செய்யப்படும் குழு ஐபிஎல் - 6 வது
போட்டியின் ஊழல் விவகாரம் குறித்து
உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும்
நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
மேலும் ....
No comments:
Post a Comment