சென்னை
ஐகோர்ட்டில், நாம் தமிழர் கட்சியின்
தலைவர் சீமான் செபாஸ்டியன் தாக்கல்
செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பாஸ்போர்ட் புத்தகத்தில் கூடுதல் பக்கங்களை இணைத்து
வழங்கும்படி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்
அதிகாரியிடம் விண்ணப்பித்தேன்.
என்மீதான
கிரிமினல் வழக்கு பற்றிய விளக்கத்தையும்
அனுப்பினேன். எனது விளக்கக் கடிதத்தை
பெற்று ஒரு ஆண்டு கழித்த
பின்னரும், பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை சேர்த்து
எனக்கு இதுவரை வழங்கவில்லை.
இதனால்,
வெளிநாடுகளில் தமிழர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்குகளில்கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் நான்
உள்ளேன். எனவே, என் பாஸ்போர்ட்டை
கூடுதல் பக்கங்கள் இணைத்து வழங்கும்படி மண்டல
பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் என்.சந்திரசேகரன், கே.சக்திவேல் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரின் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்களை இணைத்து
ஒருவாரத்துக்குள் அவரிடம் மண்டல பாஸ்போர்ட்
அதிகாரி வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் .....
No comments:
Post a Comment